மைதானத்திலேயே உடைந்து அழுத மெஸ்ஸி!

அர்ஜென்டினா தோல்வியினால் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக உலகக் கிண்ணத்தை வெல்ல முடியாமல் அணியின் அணி தலைவர் லியோனல் மெஸ்ஸி தொடரில் இருந்து கண்ணீருடன் விடைபெற்றார்.

23 ஆவது உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியிஸ் அர்ஜென்டினா அணியை கூடுதல் நேர ஆட்டத்தில் 1 – 0 என்ற கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் வெற்றி வெற்றி பெற்றது.

அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைப் மைதானத்தில் இந்த இறுதிப் போட்டி நடந்தது. இதில் அர்ஜென்டினாவை வீழ்த்தியதன் மூலம் ஸ்பெயின் அணி 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஸ்பெயின் அணிக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கிண்ணத்தை வழங்கினார்.

அர்ஜென்டினா தோல்வியினால் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக உலகக் கிண்ணத்தை வெல்ல முடியாமல் அணியின் அணி தலைவர் மெஸ்ஸி தொடரில் இருந்து கண்ணீருடன் விடைபெற்றார்.

உலகக் கிண்ணத்தில் மெஸ்ஸியின் கடைசிப் போட்டியாகக் இது தெரிவிக்கப்படுகிறது.

இந்த தொடரில் ரன்னர்-அப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்ட பின், மைதானத்திலேயே மெஸ்ஸி கண்ணீர் விட்டு அழுதது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அர்ஜென்டினா கால்பந்து கூட்டமைப்பு தனது எக்ஸ் பக்கத்தில் மெஸ்ஸிக்காக ஒரு நெகிழ்ச்சி பதிவை வெளியிட்டுள்ளது.

அதில், “எங்கள் Captain னே, உங்களுடைய கண்ணீர் எங்களின் கண்ணீர்! எங்கள் வாழ்நாளின் மிகச்சிறந்த மகிழ்ச்சியை நீங்கள் எங்களுக்கு வழங்கியுள்ளீர்கள்.

உங்களது அர்ப்பணிப்பிற்கும், மாயாஜால ஆட்டத்திற்கும், கடைசி நொடி வரை நீங்கள் கொடுத்த ஒட்டுமொத்த உழைப்பிற்கும் நன்றி. உங்களை நாங்கள் எப்போதும் நேசிக்கிறோம் லியோ!” என்று நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளது.

2021 மற்றும் 2024 கோபா அமெரிக்கா பட்டங்கள், 2022 உலகக் கிண்ண என அர்ஜென்டினாவின் பொற்காலத்தை வழிநடத்திய மெஸ்ஸியின் சகாப்தம் ஒரு சோகமான இறுதியை எட்டியுள்ளது.

இறுதிப்போட்டியில் லியோனல் மெஸ்ஸி கோல் எதுவும் அடிக்காத நிலையில், பிரான்ஸ் அணி தலைவர் எம்பாப்பே தனது இரண்டாவது ‘கோல்டன் பூட்’ விருதை வென்றார்.

இதன் மூலம், ஒன்றுக்கும் மேற்பட்ட உலகக் கிண்ணங்களில் அதிக கோல் அடித்த வீரராக திகழும் முதல் வீரர் என்ற பெருமையை இந்த எம்பாப்பே பெற்றார். நான்காவது இடத்தைப் பிடித்த பிரான்ஸ் அணிக்காக எம்பாப்பே மொத்தம் 10 கோல்களையும் நான்கு ‘அசிஸ்ட்’களையும் (கோல் அடிக்க உதவிய வாய்ப்புகள்) பதிவு செய்தார்.

மறுபுறம், தனது கடந்த 12 உலகக் கிண்ண ஆட்டங்களில் முதல் முறையாக கோல் அல்லது ‘அசிஸ்ட்’ எதுவும் இல்லாமல் ஆட்டத்தை முடித்த மெஸ்ஸி, மொத்தம் எட்டு கோல்கள் மற்றும் நான்கு ‘அசிஸ்ட்’களுடன் போட்டியை நிறைவு செய்தார்.

ஆட்டத்தின் வழக்கமான நேரத்தின் இறுதியில் அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் என்ஸோ பெர்னாண்டஸ் இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்று மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.

10 பேர் கொண்ட அர்ஜென்டினாவின் பலவீனத்தைப் பயன்படுத்திய ஸ்பெயின், கூடுதல் நேரத்தின் 106 ஆவது நிமிடம் வரலாற்று சிறப்புமிக்க கோலை அடித்தது.

இந்த ஒற்றைக் கோல் மூலம் ஸ்பெயின் அணி தனது 2 ஆவது உலகக் கிண்ணத்தை மகுடத்தைச் சூடியது. இதற்கு முன்னதாக 2010-ல் ஸ்பெயின் உலகக் கிண்ணத்தை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore