நவகமுவ துப்பாக்கிச் சூடு – இருவர் கைது

நவகமுவ துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களை ஹோமாகம கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கடந்த 16ஆம் திகதி நவகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொரத்தொட்ட பகுதியில் நபர் ஒருவரை துப்பாக்கி பிரயோகம் நடத்தி சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் ஹோமாகம கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

அதற்கமைய, விசாரணை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த மனிதப் படுகொலையை மேற்கொள்வதற்காகக் குற்றவாளிகள் வந்த மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் மற்றும் அக்குற்றத்தைச் செய்வதற்கு உதவி மற்றும் ஒத்தாசை வழங்கிய சந்தேகநபர் ஒருவரும் நேற்று (19) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

பியகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்கொட பகுதியிலும், நவகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வதுரமுல்ல பிரதேசத்திலுமே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குற்றச்செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 21 மற்றும் 29 வயதுடைய ரணால மற்றும் பள்ளம பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் ஹோமாகம கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore