உலக வங்கி குழுமத்தின் உறுப்பினரான International Finance Corporation (IFC) மற்றும் HSBC இணைந்து, இலங்கையின் பிரதான கடல் நுழைவாயிலான கொழும்பு துறைமுகத்தின் South Asia Gateway Terminals (SAGT) நிறுவனத்தின் செயல்பாடுகளை நவீனமயமாக்கவும், கார்பன் உமிழ்வைக் குறைக்கவும் அமெரிக்க டொலர் 40 மில்லியன் வரை முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளன.
இந்த நிதியில், IFC-யின் 20 மில்லியன் டொலர் Sustainability-Linked Loan மற்றும் HSBC-யின் 20 மில்லியன் டொலர் Green Loan ஆகியவை அடங்குகின்றன.
இந்த முதலீட்டின் மூலம் புதிய Twin-Lift Ship-to-Shore Cranes கொள்வனவு செய்யப்படவுள்ளதால், துறைமுகத்தின் உற்பத்தித்திறன், செயல்திறன் மற்றும் எரிசக்தி திறன் மேம்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த திட்டம்:
துறைமுக உற்பத்தித்திறனை குறைந்தது 11% அதிகரிக்கவும்,
கார்பன் உமிழ்வைக் குறைக்கவும்,
சரக்கு கையாளும் திறனை விரிவுபடுத்தவும்,
பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முதலீடு, இலங்கையை தெற்காசியாவின் முன்னணி பிராந்திய தளவாட மற்றும் சரக்கு பரிமாற்ற மையமாக மேலும் வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.





