2026 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஆரம்பம்

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர (GCE Ordinary Level) பரீட்சைக்கான விண்ணப்பங்கள் தற்போது ஏற்றுக்கொள்ளப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத மாணவர்களும் விண்ணப்பிப்பதில் எந்த தடையும் இல்லை என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பங்கள் 2026 ஜூலை 03 முதல் ஜூலை 23 வரை இணையவழியாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் உத்தியோகபூர்வ அறிவுறுத்தல்களை கவனமாக பின்பற்றி விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதி எந்த காரணத்திற்காகவும் நீடிக்கப்படமாட்டாது என திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலதிக தகவல்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தையோ அல்லது
011-2784537, 011-2786616, 011-2784208
ஆகிய இலக்கங்களையோ தொடர்புகொள்ள முடியும்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore