60 மாகாண சாலைகளை புனரமைக்க அதிகாரிகள் குழு நியமனம்

நாட்டின் பல பகுதிகளில் அவசர புனரமைப்பு தேவைப்படும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகளின் கீழுள்ள சுமார் 60 சாலைகளை புனரமைக்கும் நடவடிக்கைக்காக அதிகாரிகள் குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகள், அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய பாலங்களை நிர்மாணித்தல், பராமரித்தல் மற்றும் முகாமைத்துவம் செய்வதற்குப் பொறுப்பான வீதிகள் அபிவிருத்தி அதிகாரசபை (RDA), இச்சாலைப் புனரமைப்பு பணிகளையும் முன்னெடுக்கவுள்ளது.

இதற்காக நிதி அமைச்சு, போக்குவரத்து அமைச்சு, பொதுநிர்வாக அமைச்சு, நிதி ஆணைக்குழு, மாகாண பிரதம செயலாளர், வீதிகள் அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய அதிகாரிகள் குழு அமைக்கப்படவுள்ளது.

இந்த முன்மொழிவை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore