மிகவும் எதிர்பார்க்கப்படும் Grand Theft Auto 6 (GTA 6) விளையாட்டின் இசை ஆல்பம் தொடர்பான அறிவிப்பு, அந்த விளையாட்டு டிஜிட்டல் வடிவில் மட்டுமே வெளியாகும் என்ற முடிவு குறித்த விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது.
Rockstar Games அறிவித்துள்ள “Grand Theft Auto VI: The Album” ஆல்பத்தில் மொத்தம் 34 பாடல்கள் இடம்பெறவுள்ளன. இந்த ஆல்பம் GTA 6 வெளியாகும் நவம்பர் 19ஆம் திகதி CD, Vinyl மற்றும் டிஜிட்டல் வடிவங்களில் வெளியிடப்படவுள்ளது.
இதில் Travis Scott, Morgan Wallen, PinkPantheress, Yung Lean, Future, Metro Boomin, Fred again.. மற்றும் Keith Richards உள்ளிட்ட பல பிரபல இசைக்கலைஞர்களின் பாடல்கள் இடம்பெறுகின்றன. தற்போது முதல் 6 பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
GTA தொடரில் இசைக்கு முக்கிய இடம் காணப்படுகிறது. விளையாட்டின் வாகனங்களை ஓட்டும்போது பல்வேறு வானொலி நிலையங்கள் மூலம் வெவ்வேறு வகையான பாடல்களை கேட்க முடியும். GTA 6-ல் “dynamic score” மற்றும் மேம்படுத்தப்பட்ட விளையாட்டு வானொலி அனுபவம் இடம்பெறும் என Rockstar தெரிவித்துள்ளது.
இதனிடையே, GTA 6 விளையாட்டுக்கான physical disc வெளியீடு இல்லாத நிலையில், அதன் இசை ஆல்பம் CD மற்றும் Vinyl வடிவங்களில் வெளியாகவிருப்பது குறித்து சில ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் முரண்பாடான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இதுவே தற்போது புதிய விவாதமாக உருவெடுத்துள்ளது.
GTA தொடரில் இடம்பெறும் பாடல்கள் கலைஞர்களுக்கு புதிய ரசிகர்களை பெற்றுத்தருவதுடன், பழைய பாடல்களின் streaming எண்ணிக்கையிலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளன.
GTA 6 நவம்பர் 19, 2026 அன்று PlayStation 5 மற்றும் Xbox Series X|S தளங்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





