பின்னவல:
உலக பூனை தினத்தை முன்னிட்டு, பின்னவல மிருகக்காட்சிசாலை தனது மூன்று அழகிய Fishing Cat குட்டிகளை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளதுடன், அவற்றுக்கு பெயர் சூட்டும் போட்டியையும் அறிவித்துள்ளது.
தேசிய மிருகக்காட்சிசாலைகள் திணைக்களம், விலங்குகளை நேசிப்பவர்களிடம் இருந்து இந்த மூன்று குட்டிகளுக்கான அர்த்தமுள்ள மற்றும் படைப்பாற்றல்மிக்க பெயர்களை முன்மொழியுமாறு அழைப்பு விடுத்துள்ளது.
போட்டியில் பங்கேற்பவர்கள் 3 ஆண் பெயர்களும், 3 பெண் பெயர்களும் மொத்தம் ஆறு பெயர்களை பரிந்துரைக்க வேண்டும்.
சமர்ப்பிக்கப்படும் பெயர்களில் சிறந்தவற்றை நடுவர் குழு தேர்வு செய்யும். வெற்றியாளர்களுக்கு ஆகஸ்ட் 8 ஆம் தேதி நடைபெறும் உலக பூனை தின நிகழ்வில் விசேட பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
போட்டியில் பங்கேற்க விரும்புவோர் Google Form மூலம் தங்களது பெயர் பரிந்துரைகளை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதி நாள் ஆகஸ்ட் 7 ஆகும்.





