கடும் வெப்பம் மற்றும் வறட்சியால் 10 மில்லியன் மக்களுக்கு குழாய் நீர் பயன்படுத்த தடை – Thames Water அறிவிப்பு

லண்டன்:
இங்கிலாந்தின் மிகப்பெரிய குடிநீர் வழங்கும் நிறுவனங்களில் ஒன்றான Thames Water, கடும் வெப்பநிலை மற்றும் நீண்டகால வறட்சியான காலநிலை காரணமாக சுமார் 10.1 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு தற்காலிக குழாய் நீர் பயன்பாட்டு தடையை (Hosepipe Ban) அறிவித்துள்ளது.

இந்தத் தடை வியாழக்கிழமை முதல் அமுலுக்கு வருகிறது. இதன்படி, பொதுமக்கள் தோட்டங்களுக்கு நீர் ஊற்றுதல், கார் கழுவுதல், நீச்சல் குளங்கள் மற்றும் சிறுவர் நீச்சல் தொட்டிகளை நிரப்புதல், வெளிப்புற பகுதிகளை சுத்தம் செய்தல் போன்ற தேவைகளுக்கு குழாய் (Hosepipe) பயன்படுத்த முடியாது.

Thames Water நிறுவனம் தெரிவித்ததாவது, அதன் சேவைப் பகுதிகளில் வழக்கமான அளவை விட மழைப்பொழிவு மிகவும் குறைந்துள்ளது. இந்த ஆண்டு வசந்த காலத்தில் சராசரி மழையின் சுமார் 40% மட்டுமே பதிவாகியுள்ளது என்றும், அதிக வெப்பநிலை காரணமாக நீர் தேவை அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளது.

Thames Water அதிகாரி Nevil Muncaster கூறுகையில், “அனைவருக்கும் தேவையான நீர் விநியோகத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

இந்தத் தடை லண்டன், Thames Valley, Surrey, Gloucestershire மற்றும் Wiltshire உள்ளிட்ட பகுதிகளில் Thames Water மூலம் குடிநீர் பெறும் மக்களுக்கு பொருந்தும்.

எனினும், குடிநீர், சமையல், குளியல் மற்றும் சுகாதார தேவைகளுக்கான நீர் பயன்பாடு தொடர அனுமதிக்கப்பட்டுள்ளது. சில விசேட நிலைமைகளில், குறிப்பாக மருத்துவ தேவைகள், விலங்குகள் பராமரிப்பு மற்றும் சில விவசாய தேவைகளுக்கு விதிவிலக்குகள் வழங்கப்படலாம்.

இங்கிலாந்தின் பல பகுதிகளில் ஏற்கனவே இதுபோன்ற நீர் கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள நிலையில், தொடர்ந்து நிலவும் வெப்ப அலைகள் மற்றும் குறைந்த மழைப்பொழிவு காரணமாக நீர் வளங்களுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore