நம்பிக்கையாளர் சபையின் கீழ் இயங்கும் சம்மாந்துறை ஜனாஸா நலன்புரி அமைப்பு, தனது ஜனாஸா வாகனத்திற்கான சாரதி ஒருவரைத் தெரிவு செய்வதற்காக விண்ணப்பங்களை கோரியுள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை பின்வரும் தகைமைகளை கொண்டவர்கள் சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்களுக்கான தகைமைகள்:
- சம்மாந்துறையில் பிறந்து தற்போது வசித்து வரும் முஸ்லிமாக இருத்தல் வேண்டும்.
- கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் கணிதம் மற்றும் தமிழ் உட்பட 06 பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும். (3C, 3S பெறுபேறு)
- Heavy Vehicle (2/5) சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றிருக்க வேண்டும்.
- சாரதி அனுமதிப்பத்திரம் பெற்ற பின்னர் குறைந்தது 5 வருட அனுபவம் கொண்டவராக இருத்தல் வேண்டும்.
- வாகனத்தில் ஏற்படும் சாதாரண திருத்தங்களை மேற்கொள்ளும் திறன் கொண்டவராக இருத்தல் வேண்டும்.
- வாகனத்தை முறையாக பராமரிக்கும் பொறுப்பு கொண்டவராக இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர் 50 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை எதிர்வரும் 2026.08.05 ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு முன்னர்,
தலைவர் / செயலாளர்,
நம்பிக்கையாளர் சபை,
இஸ்லாமிய செயலகம்,
பெரிய பள்ளிவாசல்,
சம்மாந்துறை
என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரடியாக நம்பிக்கையாளர் சபை அலுவலகத்திலோ சமர்ப்பிக்க முடியும்.
குறித்த காலக்கெடுவிற்கு பின்னர் கிடைக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களின் பிரதிகளையும் இணைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
குறிப்பு: சம்பளம் கலந்துரையாடல் மூலம் தீர்மானிக்கப்படும்.
விண்ணப்பப் படிவங்களை நம்பிக்கையாளர் சபை காரியாலயத்தில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
– தலைவர் / செயலாளர்
நம்பிக்கையாளர் சபை, இஸ்லாமிய செயலகம், பெரிய பள்ளிவாசல், சம்மாந்துறை






