சவூதியுடனான அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ட்ரம்ப் அனுமதி

சர்வதேச மேற்பார்வையின் தங்கத் தரநிலையை ஏற்றுக்கொள்ளாமலேயே, சவூதி அரேபியா தனது சிவில் அணு உலைகளுக்குத் தேவையான எரிபொருளைத் தானே செறிவூட்டுவதற்கு வழிவகுக்கும் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இந்த ஒப்பந்தம் 30 ஆண்டுகள் நீடிக்கும் என்றும், விரைவில் அறிவிக்கப்படலாம் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சவூதி அணுசக்தித் திட்டத்தை மேம்படுத்துவதற்காக அமெரிக்க நிறுவனங்கள் தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவத்தை வழங்கும் என்றும் குறிப்பிடப்படுகின்றது.

சவூதி அரேபியாவிற்கு அணுசக்தித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான உரிமையை வழங்கும் எந்தவொரு ஒப்பந்தமும் உள்நாட்டிலும் பரந்த மத்திய கிழக்கு பிராந்தியத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தக்கூடும் என அச்சம் வௌியிடப்பட்டுள்ளது.

ஏனெனில், அணு எரிபொருளைச் செறிவூட்டும் திறன் கோட்பாட்டு ரீதியாக இறுதியில் அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கு வழிவகுக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

இந்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட பின்னர் ட்ரம்ப் நிர்வாகம் அதனை அமெரிக்க காங்கிரஸின் ஒப்புதலுக்காக அனுப்பவுள்ளது.

ஈரான் போர் குறித்த கவலைகள் மற்றும் காங்கிரஸின் நிராகரிப்புச் சாத்தியக்கூறுகள் காரணமாக இந்த ஒப்பந்தத்தை ட்ரம்ப் நிர்வாகம் பல மாதங்களாகக் கிடப்பில் போட்டிருந்ததாக சி.என்.என் ஊடகம் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தது.

யுரேனியம் செறிவூட்டலைத் தொடங்குவதற்கு முன், அது நியாயமானதா மற்றும் வணிக ரீதியாகச் சாத்தியமானதா என்பதை அமெரிக்க-சவூதி கூட்டுக்குழு ஆராயும்.

மேலும், உணர்திறன் வாய்ந்த அதிநவீன தொழில்நுட்பத்தை சவூதி அரேபியாவிற்கு மாற்றாமல் அமெரிக்கர்களே அந்த அணுசக்தி வசதியை உருவாக்குவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore