இங்கிலாந்தின் லீட்ஸ், யீடன் (Yeadon) பகுதியில் நீலம் மற்றும் மஞ்சள் நிற வர்ணம் பூசப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண் முள்ளம்பன்றி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
Honey என பெயரிடப்பட்ட இந்த முள்ளம்பன்றி, பிரபலமான வீடியோ கேம் கதாபாத்திரமான Sonic the Hedgehog போல தோற்றமளிக்க அதன் உடலில் வர்ணம் பூசப்பட்டிருந்ததாக மீட்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Prickly Pigs Hedgehog Rescue அமைப்பினர், எண்ணெய் அடிப்படையிலான வர்ணத்தை ஒவ்வொரு முள்ளிலிருந்தும் அகற்ற முயற்சி செய்ததுடன், வலி நிவாரண சிகிச்சைகளையும் வழங்கினர். எனினும், வர்ணத்தின் நச்சுத்தன்மை காரணமாக ஏற்பட்ட கடுமையான சுவாச பிரச்சினைகளால் அது உயிரிழந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாக்கப்பட்ட விலங்கிற்கு தேவையற்ற துன்பத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 44, 21, 17 மற்றும் 15 வயதுடைய நான்கு ஆண்கள் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
“மனிதர்களின் செயற்பாடுகளால் தான் முள்ளம்பன்றிகள் ஆபத்தான உயிரினங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன” என மீட்பு அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.





