நீதியமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நானயக்காரவிற்கு எதிராக எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (24) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
கடந்த 21ஆம் திகதி எதிர்க்கட்சியினால் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்னவிடம் இந்த பிரேரணை கையளிக்கப்பட்டது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தின் போது, கைதிகள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பு தொடர்பான தனது பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றத் தவறியதாகக் குற்றம் சுமத்தி இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 11.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பிரேரணை மீதான விவாதம் இடம்பெற்று, பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.





