ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா பிரமாண்டமாக நடைபெற்றது.
மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா, பிரபலமான “Tardis” வடிவ மேடையிலிருந்து தோன்றி பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினர். இவர்களுடன் ஆறு முறை ஒலிம்பிக் தங்கம் வென்ற சர் கிறிஸ் ஹோயும் கலந்து கொண்டார்.

74 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த வீரர்கள் அணிவகுப்பில் பங்கேற்றனர். இந்த விழாவில் லொக் நெஸ் அரக்கன் (Loch Ness Monster), ஸ்கொட்லாந்தின் கலாச்சாரம், இசை மற்றும் வரலாற்றை பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
கிளாஸ்கோ நகரம் 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் காமன்வெல்த் போட்டிகளை நடத்துகிறது. இந்த முறை 10 விளையாட்டுகளில் 215 பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.
விழாவின் முக்கிய அம்சமாக, முதன்முறையாக வீரர்கள் தொடக்க நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்பே அரங்கில் அணிவகுத்து வந்தனர். 74 நாடுகளுக்கும் தனித்தனி மரக் குச்சிகள் வழங்கப்பட்டு, அவை மேடையில் “ஒற்றுமையின் தோட்டம்” என்ற அடையாளமாக நாட்டப்பட்டன.
காமன்வெல்த் விளையாட்டு தலைவர் டொனால்ட் ருகாரே,
“விளையாட்டு உலக மக்களை ஒன்றிணைக்கும் சக்தி கொண்டது” எனத் தெரிவித்தார்.
முடிவில் ஸ்கொட்லாந்து இசைக் கலைஞர்கள் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சிகள் மற்றும் பிரமாண்டமான பட்டாசு காட்சிகளுடன் தொடக்க விழா நிறைவடைந்தது.





