செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் அதிகரித்து வரும் முதலீடுகள் காரணமாக முதலீட்டாளர்களின் கவலை அதிகரித்த நிலையில், Google நிறுவனத்தின் தாய் நிறுவனமான Alphabet மற்றும் Tesla நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளன.
Alphabet நிறுவனத்தின் பங்கு மதிப்பு சுமார் 7% வரை சரிந்துள்ளதுடன், Tesla பங்குகள் 14.5% வீழ்ச்சியடைந்துள்ளன.
AI கட்டமைப்பு மற்றும் தொடர்புடைய திட்டங்களுக்காக பெருமளவில் செலவிடுவதால், இரு நிறுவனங்களும் சமீபத்திய நிதி அறிக்கைகளில் எதிர்மறை பணப்புழக்கத்தை (Negative Free Cash Flow) பதிவு செய்துள்ளன.
Google இந்த ஆண்டு AI திட்டங்கள் மற்றும் உட்கட்டமைப்புக்காக சுமார் 205 பில்லியன் அமெரிக்க டொலர் வரை செலவிட எதிர்பார்க்கிறது. Tesla நிறுவனம் இந்த ஆண்டு 25 பில்லியன் அமெரிக்க டொலர் வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
AI முதலீடுகள் எதிர்காலத்தில் எப்போது வருமானத்தை உருவாக்கும் என்பது தொடர்பில் முதலீட்டாளர்களிடையே சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Google CEO சுந்தர் பிச்சை, AI தொழில்நுட்ப மாற்றம் இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், எதிர்காலத்தில் இது மிகப்பெரிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.





