பங்களாதேஷ் ஜனாதிபதி இராஜினாமா!

பங்களாதேஷ் ஜனாதிபதி மொஹமட் ஷஹாபுதீன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஏப்ரல் 2023 முதல் பங்களாதேஷ் நாட்டின் ஜனாதிபதியாக இருந்து வரும் ஷஹாபுதீன், 2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இளைஞர் போராட்டக்காரர்களால் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியிலிருத்து அகற்றப்பட்டதற்குப் பிறகும், சில நாட்களுக்குப் பிறகு இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படும் வரையிலும் நாட்டின் கொந்தளிப்பான காலக்கட்டத்தில் மேற்பார்வை செய்தார்.

பங்களாதேஷின் ஜனாதிபதி அந்நாட்டின் அரசுத் தலைவர் (Head of State) ஆவார், ஆனால் இப்பதவி பெரும்பாலும் சடங்குப்பூர்வமான ஒன்றாகும். நிர்வாக அதிகாரம் முழுவதும் பிரதமர் மற்றும் அமைச்சரவையிடமே உள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore