இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2019/2020 கல்வியாண்டுக்கான பொறியியல் பீடத்தின் சிறந்த ஒட்டுமொத்த மாணவராக, சம்மாந்துறையைச் சேர்ந்த முகம்மது உவைஸ் முன்ஸிப் அகமட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் தனது சிறந்த கல்விச் செயல்திறனைப் பாராட்டி,
- பொறியியல் பீடத்தின் சிறந்த ஒட்டுமொத்த செயல்திறனுக்கான தங்கப்பதக்கம், மற்றும்
- மின்சார மற்றும் மின்னணுவியல் (Electrical & Electronic Engineering) பொறியியல் துறையின் சிறந்த செயல்திறனுக்கான தங்கப்பதக்கம்
எனும் இரண்டு உயரிய தங்கப்பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இச்சாதனையின் மூலம் தனது குடும்பத்திற்கும், கல்வி நிறுவனத்திற்கும், சம்மாந்துறை மக்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
முகம்மது உவைஸ் முன்ஸிப் அகமட் அவர்கள், பொறியியலாளர் A.M. உவைஸ் (CE – RDA) மற்றும் A.H.S. ஹிதாயா (ஆசிரியை) ஆகியோரின் புதல்வராவார்.
இவரின் இச்சிறப்பான கல்விச் சாதனைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். எதிர்காலத்திலும் தனது திறமையின் மூலம் சமூகத்திற்கும் நாட்டிற்கும் சிறந்த பங்களிப்பை வழங்க வாழ்த்துகள் தெரிவிக்கப்படுகின்றன.





