சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் 5வது மாதாந்த அமர்வு!

சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் 5வது மாதாந்தக் அமண்வு (02) நிந்தவூரில் அமைந்துள்ள Coco Hut Restaurant இல் சங்கத்தின் தலைவர், சிரேஷ்ட சட்டத்தரணி திரு. K.L. அப்துல் சலீம் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

அமர்வின் நிகழ்ச்சிகளை சங்கத்தின் செயலாளர் சட்டத்தரணி A.J.M. நவாஸ் அவர்கள் வழிநடத்தினார். கூட்ட ஏற்பாடுகள் சட்டத்தரணி ஏ.எம். உமைறா பிர்னாஸ் அவர்களினால் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அமண்வில் சங்கத்தின் உப தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி திரு. ஏ.எம்நசீல் முன்னாள் தலைவர்கள் சிரேஷ்ட சட்டத்தரணி S.M.M.முஸ்தபா மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி A.H.அறூஸ் உள்ளிட்ட பல சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட சட்டத்தரணிகள் கலந்துகொண்டு கூட்டத்தைச் சிறப்பித்தனர்.

கூட்டத்தின் போது, கொழும்பில் நடைபெற்ற “Lords of the Pitch – ஜனாதிபதி சட்டத்தரணி ஏட்லி பெரேரா ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்தை சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் சுவீகரித்தமை அதனுடன் தொடர்புடைய விடயங்களும் விரிவாக ஆராயப்பட்டன.

அத்துடன், குறித்த போட்டியில் எமது சங்கத்திற்குக் வெற்றிக்கிண்ணத்துடன் கிடைக்கப்பெற்ற ரூபாய் 250,000/- (இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம்) பணப்பரிசை, அணியின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி S.M.M.முஸ்தபா அவர்கள், சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி K.L. அப்துல் சலீம் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார். இந்நிகழ்வு கூட்டத்தின் முக்கிய சிறப்பம்சமாக அமைந்தது.

மேலும், சங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள், உறுப்பினர்களின் நலன், தொழில்முறை முன்னேற்றம் மற்றும் நீதித்துறை தொடர்பான பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்தும் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்று, தேவையான தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.

இறுதியாக, கூட்டத்தில் கலந்துகொண்டு அதன் வெற்றிக்கு பங்களித்த அனைத்து சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட சட்டத்தரணிகளுக்கும் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore