ஹட்டன் பாடசாலைகளுக்கு பூட்டு – கண்டி, நுவரெலியா பாடசாலைகள் திறப்பு!

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் அனைத்து அரச பாடசாலைகளும் இன்று (05) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன.

நிலவிய பலத்த மழை காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்தங்களைக் கருத்தில் கொண்டு, குறித்த மாவட்டங்களின் அனைத்துப் பாடசாலைகளையும் மூடுவதற்கு மத்திய மாகாணக் கல்வித் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.

எனினும், நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மத்திய மாகாணக் கல்விப் பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக ஹட்டன் கல்வி வலயத்தின் அனைத்துப் பாடசாலைகளையும் இன்று (05) மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சீரற்ற வானிலையால் 9 மாவட்டங்களைச் சேர்ந்த 11,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

3,014 குடும்பங்களைச் சேர்ந்த 11,832 பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அனர்த்த நிகழ்வுகளால் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், இயற்கை அனர்த்தங்களால் ஒரு வீடு முழுமையாகவும், 290 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

நேற்று (04) மாலை 6 மணி நிலவரப்படி அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்ட அறிக்கையின்படி, 51 பாதுகாப்பு மத்திய நிலையங்களில் 3,538 பேர் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore