ஸஹீர் கான் தலைமையிலான குழு LPL ஜாஃப்னா அணியை வாங்கியது

இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாஹிர் கான் இணை உரிமையாளராக உள்ள Anchor Sports AB நிறுவனம், லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் Jaffna Kings அணியை அதிகாரப்பூர்வமாகக் கைப்பற்றியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அணி இனி Anchor Jaffna Kings என்ற புதிய பெயரில் போட்டியிடும்.

முன்னதாக, போட்டி நிர்ணய (Match Fixing) குற்றச்சாட்டில் இணை உரிமையாளர் மன்ஜோத் கல்ரா கைது செய்யப்பட்டதையும், மற்றொரு இணை உரிமையாளர் மயங்க் கோயல் தலைமறைவானதையும் அடுத்து, அணி இலங்கை கிரிக்கெட் (SLC) மற்றும் LPL நிர்வாகத்தின் அவசரக் கட்டுப்பாட்டில் இயங்கி வந்தது.

Anchor Sports AB நிறுவனம் ஏற்கனவே பெல்ஜியத்தின் European T20 Premier League மற்றும் கனடாவின் Super60 League தொடர்களிலும் அணிகளுக்குச் சொந்தக்காரராக உள்ளது.

சர்ச்சைகள் இருந்தபோதிலும், Jaffna Kings இந்த சீசனில் லீக் சுற்றில் முதலிடத்தைப் பிடித்ததுடன், LPL வரலாற்றில் 5 தொடர்களில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற மிக வெற்றிகரமான அணியாகவும் திகழ்கிறது.

இதுகுறித்து ஜாஹிர் கான் கூறுகையில், “இலங்கை கிரிக்கெட்டின் ஒரு பகுதியாக இணைவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இலங்கையின் திறமையான பந்துவீச்சாளர்களை நான் எப்போதும் பாராட்டியுள்ளேன். Anchor Jaffna Kings அணியுடன் இணைந்து இளம் வீரர்களின் வளர்ச்சிக்கு பங்களிக்க ஆவலாக இருக்கிறேன்” என்றார்.

LPL போட்டி இயக்குநர் சமந்த டொடன்வெல இந்த உரிமை மாற்றத்தை வரவேற்று, ஜாஹிர் கானின் அனுபவமும் வழிகாட்டுதலும் இலங்கை இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு பெரும் ஊக்கமாக அமையும் என தெரிவித்தார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore