பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பையும், நுகர்வோர் நலனையும் உறுதிப்படுத்தும் நோக்கில், சம்மாந்துறை சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று (05.08.2026) திடீர் வர்த்தக நிலைய பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய இரு உணவு உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்கள் அடையாளம் காணப்பட்டன.

குறித்த நிலையங்களில் காணப்பட்ட பாரிய சுகாதார குறைபாடுகள் கண்டறியப்பட்டதுடன், நுகர்வோரின் பயன்பாட்டுக்கு பொருத்தமற்ற சில உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, இன்று (06.08.2026) உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட இரு நபர்களுக்கும்:
🔹 ஒருவருக்கு ரூ.5,000/-
🔹 மற்றொருவருக்கு ரூ.10,000/-
என அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், ஒரு வர்த்தக நிலையத்திற்கு எதிராக கௌரவ நீதவான் விசேட உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
அதன்படி, குறித்த கடை:
✅ எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் அனைத்து சுகாதார குறைபாடுகளையும் முழுமையாக சரிசெய்ய வேண்டும்.
✅ தவறும் பட்சத்தில் கடையை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்கப்படும்.

குறித்த காலப்பகுதிக்குள் திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத நிலையில், சுகாதார பரிசோதகர்கள் மூலம் கடை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் உதவி சுகாதார மருத்துவ அதிகாரி (AMOH) அவர்களின் மேற்பார்வையில், சம்மாந்துறை பகுதி பொது சுகாதார பரிசோதகர்கள் (PHII) குழுவினரால் முன்னெடுக்கப்பட்டன.
பொதுமக்களின் சுகாதார நலனை பாதுகாக்கும் வகையில், இதுபோன்ற சட்டரீதியான அதிரடி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என சம்மாந்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவு தெரிவித்துள்ளது.






