இலங்கை சிறைகளில் 27 இந்திய மீனவர்கள்

2026 ஆம் ஆண்டு ஜூலை மாத இறுதியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 27 மீனவர்கள் இலங்கை காவலில் இருப்பதாக இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டு மீனவர்களின் 249 படகுகளும் இலங்கை பாதுகாப்புப் படையினரின் பொறுப்பில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்திய மீனவர்களின் பாதுகாப்புக்கும் நலனுக்கும் தமது அரசாங்கம் அதிக முன்னுரிமை அளிப்பதாக அவர் கூறினார்.

மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவித்து நாட்டிற்கு அழைத்து வருவது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து, இருதரப்பு வழிமுறைகள், தூதரக வழிகள் மற்றும் உயர் மட்ட பேச்சுவார்த்தைகள் மூலம் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்து கலந்துரையாடி வருவதாக அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், 2021 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை கடற்படையினரால் 1,554 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் சுமார் 10 மீனவர்கள் பாதுகாப்பு படையினரால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore