பிரதமர் ஹரினி அமரசூரிய பூட்டான் பயணம்

இலங்கை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்று (31) பூட்டானுக்கு பயணமானார். பூட்டானில் செப்டம்பர் 1ஆம் திகதி நடைபெறவுள்ள உலகளாவிய விழிப்புணர்வு உணவு முறைமைகள் உச்சிமாநாட்டில் (GCFSS) பங்கேற்பதற்காகவே பிரதமர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
முன்கூட்டியே விடுவிக்கப்பட்ட கைதிகள் மீண்டும் சிறைக்கு திரும்பும் நிலை அதிகரிப்பு

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல் தொடர்பில் புதிய கவலைகள் எழுந்துள்ளன. முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்ட சில கைதிகள், விடுதலை நிபந்தனைகளை மீறியதற்காகவும் புதிய குற்றங்களில் ஈடுபட்டதாகவும் மீண்டும் சிறைக்கு அழைக்கப்படும் நிலை
அவுஸ்திரேலியாவில் அரிதாகும் ராட்சத கடற்கணவாய் – ஒரே ஆண்டில் 97% வீழ்ச்சி!

அவுஸ்திரேலியாவின் தெற்கு கடற்பகுதியில் ஆண்டுதோறும் இடம்பெறும் உலகின் மிகப்பெரிய ராட்சத கடற்கணவாய்களின் இனப்பெருக்கக் கூட்டம் இவ்வாண்டு வரலாறு காணாத அளவுக்கு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் 1,811 ராட்சத கடற்கணவாய்கள் மட்டுமே
கடலில் நீராடச் சென்ற பெண் உட்பட 4 பேர் மாயம் – தேடுதல் நடவடிக்கை தீவிரம்

பமுணுகம – எபாமுல்ல கடற்கரையில் கடலில் நீராடிக் கொண்டிருந்த குழுவைச் சேர்ந்த பெண் ஒருவர் மற்றும் மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களில் 35 வயதுடைய பெண் ஒருவரும்,
ஈரானின் லாரக் தீவை இலக்கு வைத்து அமெரிக்கா தாக்குதல் – பிராந்திய பதற்றம் தீவிரம்

ஈரானின் முக்கிய கடற்பகுதியான ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள லாரக் தீவில் அமைந்திருந்த இரண்டு ஏவுகணை ஏவுதளங்களை இலக்கு வைத்து அமெரிக்கப் படைகள் இராணுவத் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்துக்குப் பின்னர் ஈரான் மீது

