பமுணுகம – எபாமுல்ல கடற்கரையில் கடலில் நீராடிக் கொண்டிருந்த குழுவைச் சேர்ந்த பெண் ஒருவர் மற்றும் மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களில் 35 வயதுடைய பெண் ஒருவரும், 4 மற்றும் 12 வயதுடைய இரு சிறுமிகளும், 13 வயதுடைய சிறுவன் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தைத் தொடர்ந்து அவர்களை தேடும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடலில் நீராடும் போது பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், ஆபத்தான கடற்பகுதிகளில் நீராடுவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது.





