இலங்கை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்று (31) பூட்டானுக்கு பயணமானார்.
பூட்டானில் செப்டம்பர் 1ஆம் திகதி நடைபெறவுள்ள உலகளாவிய விழிப்புணர்வு உணவு முறைமைகள் உச்சிமாநாட்டில் (GCFSS) பங்கேற்பதற்காகவே பிரதமர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
மாநாட்டின் ஆரம்ப அமர்வில் பிரதமர் முக்கிய உரையாற்றவுள்ளதுடன், நிலையான உணவு முறைமைகள், உணவுப் பாதுகாப்பு மற்றும் சமூகப் பங்களிப்பு தொடர்பான விடயங்கள் குறித்து சர்வதேச தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பிரதமர் பூட்டானுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.





