பாதாள உலகக் குழு உறுப்பினராகக் கருதப்படும் கஞ்சிப்பானி இம்ரானின் நெருங்கிய உறவினர் ஒருவர், மாளிகாவத்தை சங்கராஜ மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், குறித்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த அவர், ஆரம்பத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





