சொகுசு காரொன்றில் பெருமளவிலான கஞ்சாவை கடத்திச் சென்றதாகக் கூறப்படும் இளம் தம்பதியினர் இருவர் ஆராச்சிக்கட்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புத்தளம்–சிலாபம் பிரதான வீதியில் அமைந்துள்ள பத்துளுஓயா பொலிஸ் சோதனைச் சாவடியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, குறித்த சொகுசு காருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 17.985 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் ராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஆண் ஒருவரும், 22 வயதுடைய பெண் ஒருவரும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணைகளின்படி, கைப்பற்றப்பட்ட கஞ்சா தனமல்வில பகுதியில் பயிரிடப்பட்டதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் இன்று புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





