புத்தளம், முல்லிபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது 7,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் SLNS தம்பபண்ணி கடற்படை முகாமுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, SLNS விஜய கடற்படையினரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் (STF) இணைந்து முல்லிபுரம் பகுதியில் உள்ள வீடொன்றை சோதனையிட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் வெளிநாட்டு சிகரெட்டுகள் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் நோச்சியகம பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரும் கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





