அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் கையடக்கத் தொலைபேசி போன்று மடித்து வைத்துக்கொள்ளக்கூடிய இரண்டு கைத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து நான்கு ஆண்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குயின்ஸ்லாந்து பொலிஸாரின் தகவலின்படி, Moreton Tactical Crime Squad, Public Safety Response Team மற்றும் Dog Squad ஆகிய பிரிவுகளின் உதவியுடன், கடந்த ஆகஸ்ட் 2ஆம் திகதி மாலை 5 மணிக்குப் பின்னர், Deception Bay, Cross Street பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, கையடக்கத் தொலைபேசி போன்று தோற்றமளிக்கும் வகையில் மடிக்கக்கூடிய இரண்டு கைத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளின் பின்னர் நான்கு ஆண்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதுடன், குற்றச்சாட்டுகள் இதுவரை நீதிமன்றத்தால் நிரூபிக்கப்படவில்லை.
குயின்ஸ்லாந்து பொலிஸார் இந்த நடவடிக்கை தொடர்பான தகவல்களை ஆகஸ்ட் 12ஆம் திகதி வெளியிட்டுள்ளனர்.





