10 மாதங்களுக்குள் இலங்கையில் 5,200 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின், ஐஸ் மற்றும் கொக்கெய்ன் போதைப்பொருட்கள் கைப்பற்றல் – அழிப்பு

2025 ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் 2026 ஆகஸ்ட் 12ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 5,200 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின், ஐஸ் மற்றும் கொக்கெய்ன் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களில்,

🔹 2,259 கிலோ 129 கிராம் ஹெரோயின்
🔹 2,653 கிலோ 245 கிராம் கிரிஸ்டல் மெத்தாம்பெட்டமைன் (ICE)
🔹 293 கிலோ 755 கிராம் கொக்கெய்ன்

என பெருமளவான போதைப்பொருட்கள் அடங்குகின்றன.

நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்த வழக்குகளுடன் தொடர்புடையதாக கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள், புத்தளம் வனாத்தவில்லுவ “லட்டோ வத்த” பகுதியில் அமைந்துள்ள உயர் வெப்பநிலை எரியூட்டியில் வைத்து அழிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை அழிக்கும் நடைமுறையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore