டெல்கொடவில் கோர விபத்து – 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

டெல்கொட வீதியில் முச்சக்கர வண்டியும் காரும் மோதியதில் 7 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (19) இடம்பெற்ற இந்த விபத்தில், பியகமவிலிருந்து டெல்கொட நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி திடீரென வலதுபுறமாக திரும்பியபோது எதிர்திசையில் வந்த காருடன் மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி, இரு பெண்கள் மற்றும் இரு குழந்தைகள் படுகாயமடைந்து உடுபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், 69 வயதுடைய நபர், 39 வயதுடைய பெண் மற்றும் அவரது 7 வயது மகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மேலும், காரில் பயணித்த சிறுமி ஒருவரும் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகஹவத்த பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

(Newswire)

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore