சீனாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான Evergrande Group-ன் நிறுவனர் Hui Ka Yan-க்கு ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் Shenzhen Intermediate People’s Court இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளதுடன், அவரது தனிப்பட்ட சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
Hui Ka Yan, கடந்த ஏப்ரல் மாதம் சொத்து முறைகேடு மற்றும் நிறுவன இலஞ்சம் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டிருந்தார்.
மேலும், Evergrande நிறுவனத்துடன் தொடர்புடைய முன்னாள் நிறுவனங்களுக்கு மொத்தமாக 15.82 பில்லியன் யுவான் (சுமார் US$2.35 பில்லியன்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கணக்குப் பதிவுகளை போலியாக்குதல் மற்றும் கடன்களை மறைத்தல் உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
📉 Evergrande வீழ்ச்சி
1996ஆம் ஆண்டு Hui Ka Yan-ஆல் தொடங்கப்பட்ட Evergrande, மிகப்பெரிய கடன்களைப் பெற்று வேகமாக விரிவடைந்து சீனாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமாக வளர்ந்தது.
ஒரு கட்டத்தில் Hui Ka Yan ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராகவும் மதிப்பிடப்பட்டிருந்தார்.
ஆனால் 2020ஆம் ஆண்டு சீன அரசு ரியல் எஸ்டேட் துறையின் கடனைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து Evergrande கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியது.
2021ஆம் ஆண்டில் நிறுவனம் சரிவடைந்ததுடன், பல வீடமைப்புத் திட்டங்கள் நிறைவடையாமல் போயின. நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பும் 99% வரை வீழ்ச்சியடைந்தது.
Hui Ka Yan-ன் இரு மகன்கள் உள்ளிட்ட மேலும் சில முன்னாள் Evergrande நிர்வாகிகளுக்கும் 22 மாதங்கள் முதல் 18 ஆண்டுகள் வரையான சிறைத்தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





