மவுண்ட் லவீனியா பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ரூ.24 மில்லியன் (ரூ.2.4 கோடி) பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆகஸ்ட் 18ஆம் திகதி வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டிற்குச் சென்ற குடும்பத்தினர், மறுநாள் காலை வீடு திரும்பியபோது கொள்ளை இடம்பெற்றிருந்ததை கண்டறிந்துள்ளனர்.
இதையடுத்து ஆகஸ்ட் 19ஆம் திகதி மவுண்ட் லவீனியா தலைமையக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
பொலிஸார் மேற்கொண்ட விரைவான விசாரணையின் அடிப்படையில், இரண்டு நாட்களுக்குள் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், கொள்ளையிடப்பட்ட சில பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மவுண்ட் லவீனியா தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





