OCD அமைப்பின் 16ஆவது வீடு கையளிப்பு நிகழ்வில் விஞ்ஞான முதுமாணி அஸ்மி யாசீன் தெரிவிப்பு!!
+++++++++++++++++++++
சமூகத்தில் நிலவும் சவால்களை எதிர்கொள்வதற்கும் பின்தங்கிய மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் கூட்டு முயற்சியும் சமூக ஒற்றுமையும் அவசியமானவை.
-இவ்வாறு OCD அமைப்பின் தலைவரும், விஞ்ஞான முதுமானியும், சமூக சேவையாளரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான அஸ்மி யாசின் தெரிவித்தார்.


“யாவருக்கும் உறையுள்” எனும் தொனிப்பொருளில் OCD அமைப்பினால் நிர்மாணிக்கப்பட்டு பயனாளியிடம் கையளிக்கப்பட்ட 16ஆவது வீடு திறந்து வைத்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் உரையாற்றுகையில்,
தனிநபர்களின் முயற்சிகளை விட சமூகத்தின் கூட்டு பங்களிப்பும் பரஸ்பர ஒத்துழைப்பும் நீடித்த மக்கள் நலப் பணிகளுக்கு வலுசேர்க்கும்.
கடந்த காலங்களில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வீடமைப்பு உள்ளிட்ட சமூக நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.


எதிர்காலத்திலும் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் தொடர்ச்சியான ஒத்துழைப்புடன் மேலும் பல மக்கள் நலப் பணிகள் முன்னெடுக்கப்படும் – என்றார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறை (வீரமுனை வட்டார) பிரதேச சபை உறுப்பினர் றிஸ்விகான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறைத் தொகுதி அமைப்பாளரும், சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளருமான அல் ஹாஜ் ஜ.எல்.எம். மாஹிர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
மேலும், நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல். ஜிப்ரி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயலாளர் எம்.எம்.எ. காதர், தவிசாளர் மாஹிரின் ஒருங்கிணைப்பாளர்களான மௌலவி அப்துல் முனாப் (ஆசிரியர்), வை.பீ.எம். ஜலீல், எம்.ரி.எம். பாயிஸ், ஏ.பி. பௌசான் உள்ளிட்ட OCD அமைப்பின் உயர்பீட உறுப்பினர்கள், சமூக சேவையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.





