நாட்டில் நிலவும் அதிக வெப்பமான காலநிலையை கருத்தில் கொண்டு, குழந்தைகளின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பில் பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா அறிவுறுத்தியுள்ளார்.
அதிக நேரம் வெயிலில் விளையாடுவதால் குழந்தைகளுக்கு நீரிழப்பு மற்றும் வெப்பத்தால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.
தலைவலி, வாந்தி, உடல் வலி, மயக்கம், அசௌகரியம், பசியின்மை மற்றும் அடர் நிற சிறுநீர் போன்றவை நீரிழப்பின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியில் விளையாடும் குழந்தைகளுக்கு போதுமான நீர் மற்றும் இளநீர், ஜீவனி, பழச்சாறுகள், கஞ்சி, சூப் போன்ற திரவ உணவுகளை வழங்குவது அவசியம் என வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில் பருத்தி ஆடைகள் மற்றும் தொப்பி அணிவித்தல், குளிர்ச்சியான நிழலான இடங்களில் ஓய்வெடுக்கச் செய்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.





