தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை குடித்த 3 வயது சிறுமி உயிரிழப்பு

வவுனியாவிலிருந்து கம்பளை, புப்புரஸ்ஸ – டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து ‘ஹைட்ரஜன் பெரோக்சைட்’ இரசாயனத்தை குடித்ததில் உயிரிழந்துள்ளார்.

கடந்த 23ஆம் திகதி இரவு சிறுமிக்கு தாகம் ஏற்பட்ட நிலையில், வீட்டின் ஜன்னல் அருகில் வைக்கப்பட்டிருந்த போத்தலில் இருந்த திரவத்தை தண்ணீர் என நினைத்து குடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரசாயனத்தை குடித்த பின்னர் சிறுமியின் வாயிலிருந்து நுரை வெளியேறியதாகவும், உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிறுமி ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்ததாகவும் மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore