இலங்கையில் நிலவும் எல் நினோ நிலைமையின் தாக்கத்தால் எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வழக்கத்தை விட அதிக மழைவீழ்ச்சி ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இந்த காலப்பகுதியில் பலத்த மழை பெய்யும் பட்சத்தில் நீர்த்தேக்கங்கள் நிரம்பி, சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆறு மாதங்களுக்கான வானிலை தரவுகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் இந்த எதிர்வுகூறல் வெளியிடப்பட்டுள்ளது.
ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நாட்டின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்யக்கூடிய நிலையில், வெள்ள நிலைமை நிச்சயமாக ஏற்படும் என கூற முடியாவிட்டாலும், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களிலும் எல் நினோ நிலைமையின் தாக்கம் அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





