வெல்லவாய – மொனராகலை வீதியில் கிரிந்திஓயா பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 53 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இரு ஓட்டுநர்களும் காயமடைந்து வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர்கள் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
எனினும், சிகிச்சை பலனின்றி வெல்லவாய பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 53 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.
மற்றைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





