கல்பிட்டி, பாத்தலங்குண்டுவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 333 கிலோ மசாலாப் பொருட்களை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கடற்படையினரால் சந்தேகத்திற்கிடமான 13 சாக்குப் பொதிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அதில் 264 கிலோ உலர் இஞ்சி மற்றும் 69 கிலோ ஏலக்காய் தோல்கள் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.





