கிளிநொச்சியில் 380 கடல் அட்டைகளுடன் ஒருவர் கைது

கிளிநொச்சி கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி கடல் அட்டைகளை கொண்டு சென்றதாகக் கூறப்படும் 34 வயதுடைய நபர் ஒருவர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது சந்தேகத்திற்கிடமான படகொன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், குறித்த நபர் கடல் அட்டைகளை கரைக்கு கொண்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது.

இதன்போது 380 கடல் அட்டைகளும், அவற்றை கொண்டு வந்த படகும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபர், படகு மற்றும் கடல் அட்டைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore