விஷப் பொருட்கள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் உத்தரவின்படி நேற்று (24) இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் குறித்த சட்டத்தில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதுடன், சில புதிய ஏற்பாடுகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
சட்டத்தின் 54ஆவது பிரிவில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள ஹெரோயின், கொக்கேய்ன், மோஃபின் மற்றும் அபின் ஆகியவற்றுடன் மெத்தம்பெட்டமைன் (Methamphetamine) என்பதும் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும், அரச பகுப்பாய்வாளரின் அறிக்கைகள், போதைப்பொருள் குற்றங்களுக்கான தண்டனைகள் மற்றும் போதைப்பொருள் குற்றவாளிகளை கைது செய்யும்போது புலனாய்வு அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பிலும் புதிய திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.





