பிரித்தானியாவின் அரிய இரைதேடும் பறவை மீண்டும் இனப்பெருக்கம் – 6 குஞ்சுகள் பாதுகாப்பாக வளர்ப்பு

பிரித்தானியாவின் மிகவும் அரிய இரைதேடும் பறவைகளில் ஒன்றான Montagu’s harrier, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ரகசியமாக பாதுகாக்கப்பட்ட ஒரே பகுதியில் வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்துள்ளது.

‘AU’ என பாதுகாப்பு ஆர்வலர்களால் அழைக்கப்படும் ஆண் பறவை, இரண்டு பெண் பறவைகளுடன் இணைந்து இரண்டு கூடுகளில் மொத்தம் 6 குஞ்சுகளை வளர்த்துள்ளது.

இந்தப் பறவையின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளில் கணிசமாகக் குறைந்துள்ள நிலையில், 2020 முதல் 2024 வரை வெற்றிகரமான இனப்பெருக்கத்திற்கான எந்த ஆதாரமும் பதிவாகவில்லை. இதனால் இப்பறவை பிரித்தானியாவில் அழிவின் அபாயம் அதிகமுள்ள பறவைகளின் சிவப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

விவசாய நிலங்களில் அமைக்கப்பட்ட கூடுகளை விவசாயிகளுடன் இணைந்து பாதுகாப்பு அமைப்பினர் கண்காணித்து வருகின்றனர். நரிகள் போன்ற தரைவாழ் வேட்டையாடிகளிடமிருந்து குஞ்சுகளை பாதுகாக்க கூடுகளைச் சுற்றி பாதுகாப்பு வேலிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், இளம் பறவைகளின் இடம்பெயர்வு மற்றும் வாழ்விடங்களைப் பற்றி அறிந்து கொள்ள இந்த ஆண்டு இரண்டு குஞ்சுகளுக்கு முதன்முறையாக செயற்கைக்கோள் கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

குளிர்காலத்தில் ஆப்பிரிக்காவுக்கு இடம்பெயரும் இப்பறவைகள், கோடைக்காலத்தில் மீண்டும் ஐரோப்பாவுக்கு வந்து விவசாய நிலங்களில் கூடுகட்டுவது குறிப்பிடத்தக்கது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore