ஐக்கிய அரபு அமீரக (UAE) கிரிக்கெட் வீரர் ஆசிப் கானுக்கு 15 மாத கால போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது.
2025 செப்டம்பர் 8ஆம் திகதி நடத்தப்பட்ட போட்டிக்கு வெளியேயான ஊக்கமருந்து பரிசோதனையில், mesterolone-ன் metabolite எனப்படும் தடைசெய்யப்பட்ட பொருள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதனை ஆசிப் கான் ஏற்றுக்கொண்டதையடுத்து, WADA மற்றும் ICC உடனான Case Resolution Agreement அடிப்படையில் 15 மாத தகுதியிழப்பு காலத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.
📅 தடை அமுலாகும் காலம்:
2025 செப்டம்பர் 8 – 2026 டிசம்பர் 7
🏃 பயிற்சிக்குத் திரும்ப அனுமதி:
2026 அக்டோபர் 8 முதல்
🏏 போட்டிகளில் விளையாட தகுதி:
2026 டிசம்பர் 8 முதல்
மேலும், 2025 செப்டம்பர் 8 முதல் டிசம்பர் 29ஆம் திகதி இடைநீக்கம் செய்யப்பட்ட நாள் வரையிலான அவரது தனிப்பட்ட போட்டி முடிவுகள் அனைத்தும் செல்லுபடியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கிடைத்த பதக்கங்கள், புள்ளிகள், பரிசுத் தொகைகள் உள்ளிட்டவையும் பறிக்கப்படுகின்றன.
இந்த Case Resolution Agreement-க்கு எதிராக மேன்முறையீடு செய்ய உரிமை இல்லை என ICC தெரிவித்துள்ளது.





