சபுகஸ்கந்தவில் வாகனம் விபத்துக்குள்ளாகி சிறுவன் உயிரிழப்பு – மற்றொருவர் படுகாயம்

சபுகஸ்கந்த, பியகம – சபுகஸ்கந்த வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 15 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு சிறுவன் படுகாயமடைந்துள்ளார்.

சமுர்த்தி மாவத்தைக்கு அருகில் நேற்று (29) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சபுகஸ்கந்த நோக்கி பயணித்த கார் ஒன்றின் சாரதி வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், வீதியின் ஓரமாக நடந்து சென்ற இரு சிறுவர்கள் மீது மோதியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த இருவரும் கிரிபத்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் கோனவல பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

படுகாயமடைந்த மற்றைய சிறுவன் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய கார் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சபுகஸ்கந்த பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore