அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மீண்டும் இராணுவ மோதல்கள் ஆரம்பித்துள்ள நிலையில், உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.
இதன்படி, WTI ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 2.57% அதிகரித்து 85.54 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.
அதேவேளை, Brent ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 2.84% அதிகரித்து 90.60 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
மேலும், Murban ரக கச்சா எண்ணெயின் விலை 4.04% அதிகரித்து 95.75 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதத்தின் பிற்பகுதிக்குப் பின்னர் முதன்முறையாக ஈரானின் லாரக் தீவு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்குப் பதிலடியாக, ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மத்திய கிழக்கில் மீண்டும் தீவிரமடைந்துள்ள இந்த இராணுவ மோதல்கள் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ளதுடன், அதன் தாக்கமாக எண்ணெய் விலைகள் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





