கல்வித்துறை நிபுணர்களுக்கு கட்டாய உரிமம் மற்றும் பதிவு முறை அறிமுகம்!

இலங்கையில் ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்வித்துறை நிபுணர்களுக்கான கட்டாயப் பதிவு, தொழில்முறை உரிமம் மற்றும் தர உறுதிப்படுத்தல் முறைமை ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவேவின் தகவலின்படி, கல்வித்துறைக்கான Education Council ஒன்றை நிறுவுவதற்கான சட்டமூலம் தயாரிக்கும் பணிகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

அமைச்சரவை அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, சட்டவரைஞருக்கு குறித்த சட்டமூலத்தை தயாரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், புதிய கல்வி பேரவையை விரைவில் நிறுவ அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பேரவை மூலம் ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி ஆலோசகர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் கல்வி நிர்வாகிகள் உள்ளிட்ட கல்வித்துறை சார்ந்தவர்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதன் கீழ் தொழில்முறை தரநிலைப்படுத்தல், பதிவு, உரிமம் வழங்குதல், தர உறுதிப்படுத்தல் மற்றும் அங்கீகாரம் உள்ளிட்ட பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், ஆசிரியர்களின் தொடர்ச்சியான தொழில்முறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் தொழில்முறை மதிப்பீட்டு முறையும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

மேலும், இந்த புதிய கட்டமைப்பு தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இலங்கையின் பொதுக் கல்வித்துறையில் தரநிலைகள் மற்றும் தொழில்முறை பொறுப்புணர்வை மேலும் வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore