74 ஆண்டுகால சாதனையை முறியடித்த பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அப்பாஸ்

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அப்பாஸ், லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

போட்டியின் நான்காவது நாளில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய அவர், இந்த டெஸ்டில் மொத்தமாக 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் லார்ட்ஸ் மைதானத்தில் ஒரே டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆசிய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

மேலும், 36 வயது மற்றும் 173 நாட்களில் லார்ட்ஸ் மைதானத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், இந்த மைதானத்தில் அத்தகைய சாதனையை நிகழ்த்திய மிக வயதான ஆசிய வீரர் என்ற புதிய சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் 1952ஆம் ஆண்டு இந்தியாவின் வினூ மன்கட் 36 வயது மற்றும் 68 நாட்களில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டு முறை 8 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆசிய பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் முகமது அப்பாஸ் தற்போது பெற்றுள்ளார். 2018ஆம் ஆண்டு இதே மைதானத்தில் அவர் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore