சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) ரொஷான் அமரசிங்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் அடிப்படையில், சேவைத் தேவைகளைக் கருத்திற்கொண்டு இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னதாக CID பணிப்பாளராக செயற்பட்ட ஷானி அபேசேகர, பிரதி பொலிஸ் மா அதிபர் (DIG) பதவிக்கு பதவி உயர்வு பெற்றதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே ரொஷான் அமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, ஷானி அபேசேகர தொடர்ந்து CID-க்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





