ஓய்வுபெற்ற விமானப்படைத் தளபதி துஷார இந்துனில் பெர்னாண்டோ, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
கொழும்பு 05, எல்விட்டிகல மாவத்தையில் அமைந்துள்ள திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் கடமையேற்பு நிகழ்வு இடம்பெற்றது. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
மத அனுஷ்டானங்களுடன் நடைபெற்ற நிகழ்வில், ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையின் பிரதம குரு வணக்கத்திற்குரிய கிரிந்தே அஸ்ஸஜி தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் பங்கேற்றனர்.
மேலும், பதில் ஆணையாளர் நாயகம் தாரக தேவப்பிரிய உள்ளிட்ட திணைக்களத்தின் பல உயரதிகாரிகளும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.





