கொழும்பு, செப்டம்பர் 2: ஹம்பாந்தோட்டை மாநகர முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ, கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள குடியிருப்பொன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிடைத்துள்ள ஆரம்பகட்ட தகவல்களின் அடிப்படையில், அவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மரணம் தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணைகளின் பின்னர் தெளிவான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





