வெல்லம்பிட்டியவில் ரூ.200 மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு

வெல்லம்பிட்டி – சேதவத்தை பகுதியில் இன்று (02) முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில், சுமார் 8 கிலோகிராம் ஐஸ் மற்றும் 4 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெருந்தொகை பணமும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர், சேதவத்தை பகுதியைச் சேர்ந்த “கசுன்” என அழைக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்குள்ளான ஒருவரின் உதவியாளர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த பெறுமதி சுமார் ரூ.200 மில்லியன் என தெரிவிக்கப்படுகிறது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore